Random image

ஐஎஸ்எல் கால்பந்து – நான்காவது வெற்றியைப் பதிவுசெய்த கோவா அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஐதராபாத் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, இத்தொடரில் தனது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்தது கோவா அணி.

இந்த ஆட்டத்தின் முதல் பாதி, எந்த அணிக்கும் கோல்கள் இன்றி முடிந்தது. அதேசமயம், இரண்டாவது பாதியில், முதல் அதிரடியை ஐதராபாத் மேற்கொண்டது. 58வது நிமிடத்தில் அந்த அணியின் அரிடேன் சான்டனா ஒரு கோலடித்து தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார்.

இதனையடுத்து, 87வது நிமிடத்தில் கோவா அணியின் இஷான் பண்டிதா ஒரு கோலடித்து பதிலடி தந்தார். அதன்பிறகும் அசராத கோவா அணியின் இகோர் அங்குலோ மேலும் ஒரு கோலடித்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

கடைசி வினாடிகளில் எதுவும் செய்ய முடியாத ஐதராபாத், 1-2 என்ற கணக்கில் கோவா அணியிடம் வீழ்ந்தது.