கோவா: பணிகளை தொடங்கினார் மனோகர் பாரிக்கர்

பனாஜி:

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றார். கணைய புற்று நோயக்கு சிகிச்சை பெற்றார். அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து நேற்று கோவா திரும்பினார்.

இதையடுத்து இன்று அவர் தலைமை செயலகம் வந்து பணிகளை தொடங்கினார். அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் நடத்தினார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘நான் எனது பணிகளை தொடங்கிவிட்டேன். எனக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்ட எனது நலம் விரும்பிகளின் ஆதரவு தான் நான் குணமடைய காரணமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.