Random image

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்தது…கோவா முதல்வர் நாடு திரும்பினார்

பனாஜி:
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் மனோகர் பாரிக்கர்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதத்துக்கு பிறகு ஜூன் 14-ல் அவர் இந்தியா திரும்பினார்.

பின்னர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 29-ம் தேதி மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார். ஒரு வாரத்துக்கு மேலாக மனோகர் பாரிக்கருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.