கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பனாஜி
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய அழற்சி நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு மூன்று மாதம் சிகிச்சை நடைபெற்றது. கடந்த ஜுன் மாதம் 18 ஆம் தேதி அவர் இந்தியா திரும்பினார். அதன் பிறகு மீண்டும் இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை செய்துக் கொண்டார். கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.
நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நிலைக் கோளாறு காரணமாக மனோகர் பாரிக்கர் கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கோவை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. அவர் நலமாக இருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகருமான மைக்கேல் லோபா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் மனோகர் பாரிக்கரை சந்தித்தாக கூறப்பட்டது. மனோகர் பாரிக்கர் நலமுடன் இருப்பதாக மைக்கேல் லோபா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.