னாஜி

கோவா முதல்வர் தாம் இடைத்தேர்தலில் தோற்றால் ராணுவ அமைச்சகத்தில் சேர்வதாக சொல்லவில்லை என மறுத்துள்ளார்.

கோவாவில் இடைத்தேர்தல் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.   இந்நிலையில் முன்னாள் ராணுவ அமைச்சரும், இன்னாள் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் கூறியதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  அந்த செய்தியில் மனோகர், தாம் இடைத் தேர்தலில் தோற்றால் மீண்டும் ராணுவ அமைச்சராக பணி புரியப் போவதாக பத்திரிகை கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாக உள்ளது.

இதை மனோகர் பாரிக்கர் மறுத்துள்ளார்.  தாம் எந்த மீடியாவிலும் அது போல தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அது போல வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.   மேலும் வரும் 3 நாட்களுக்கு தன்னைப் பற்றி வாட்ஸ்அப், முகநூல் போன்ற எந்த சமூக இணையத்தில் வதந்திகள் வந்தாலும் அதை நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.