எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவா முதல்வர் நடத்திய அமைச்சரவை கூட்டம்

டில்லி

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார்.

கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தற்போது புற்று நோய் சிகிச்சைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தும் பூரண குணமடையாததால் மீண்டும் டில்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வர் இல்லாததால் அரசு சரியாக இயங்கவில்லை என காங்கிரஸ் அரசு குற்றம் சாட்டியது. அத்துடன் பாஜக அரசு தனது பெரும்பான்மையை சட்டபேரவையி நிரூபிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. கோவா மாநில சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 17 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 13 உறுப்பினர்க்ள் மட்டுமே இருந்த போதிலும் கோவா முன்னணி கட்சி, மகாராஷ்டிவாதி கோமாந்தக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், சுயேச்சை ஆகியோர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் இன்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் சுயேச்சை உறுப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர். கூட்டத்தில் முதல்வர் தாம் கவனித்து வரும் பொறுப்புக்களை மற்ற அமைச்சர்களிடம் பகிர்ந்து அளித்துள்ளதாக கூறப்படுகிறது.