னாஜி

கோவா மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ அம்மாநில முதல்வரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கோவா, டில்லி, மும்பை நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற்றார். தற்போது இவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமத்க்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் மூக்கில் டியூப் பொருத்தப்பட்ட நிலையில் நிதிநிலை அறிக்க்கையை மனோகர் பாரிக்கர் அளித்தார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூத்த பாஜக தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். நேற்று அவர் சர்வதேச புற்றுநோய் தினத்தை ஒட்டி மருத்துவமனையில் இருந்தபடியே டிவிட்டரில் செய்தி பதிந்தார்.

கோவா மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மகேல் லோபோ, “முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நிலை மோசமாக உள்ளது. கடவுளின் ஆசியால் தான் அவர் இன்னும் உயிர் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார், முதல்வர் பதவியில் இருந்து பாரிக்கர் விலகினாலோ அல்லது அவருக்கு ஏதும் நேர்ந்தாலோ கோவா மாநில அரசியலில் குழப்பம் உண்டாகும்” என தெரிவித்துள்ளார்.