Random image

வெளிநாடு பயணத்தில் கின்னஸ் சாதனை : மோடியை சிபாரிசு செய்யும் காங்கிரஸ்

னாஜி

வெளிநாட்டுப் பயணத்தில் உலக சாதனை புரிந்ததாக மோடியின் பெயரின் கோவா மாநில காங்கிரஸ் கின்னசுக்கு சிபாரிசு செய்துள்ளது.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்வதை பல எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.    அது மட்டுமின்றி அவரை பல நெட்டிசன்கள் உலகம் சுற்றும் வாலிபர் என பதிந்துள்ளனர்.   எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் ஒரு பயனும் இல்லை என கூறி வருகின்றனர்.   அதே நேரத்தில் பாஜகவினர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாக புகழ்கின்றனர்.

சமீபத்தில் கோவா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கல்ப் அமோன்கர் கின்னஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அதில் அவர், “நாங்கள் இந்தியப் பிரதமர் மோடியை உலக சாதனையாளராக பரிந்துரை செய்கிறோம்.  அவர் தான் பதவி ஏற்ற 4 ஆண்டுகளுக்குள் 52 நாடுகளுக்கு சென்றுள்ளார்.   அது மட்டுமின்றி அவர் மொத்தம் 41 முறை வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக அவர் இதுவரை ரூ. 355 கோடி செலவு செய்துள்ளார்.   இதை கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டும்.   இதன் மூலம் இந்தியாவின் வருங்கால சந்ததியினருக்கு அவர் ஒரு முன் உதாரணமாக திகழ்வார்.  அது மட்டும் இன்றி மோடி மற்றொரு சாதனையும் புரிந்துள்ளார்.  அவர் ஆட்சியில் ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்து ஒரு டாலரின் மதிப்பு ரூ.69 ஐ தாண்டி உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.