பனாஜி: கோவா மாநில துணைமுதல்வர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஆபாச படம் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகார் பதியப்பட்டுள்ள நிலையில், தனது போன் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கோவா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பிரமோத் சாவந் இருக்கிறார். துணைமுதல்வராகவும், மாநில வேளாண்துறை அமைச்சராகவும் சந்திரகாந்த் கவ்லேகர் பதவி வகிக்கிறார்.  நேற்று அதிகாலை  1.20 மணிக்கு அவரது போலில் இருந்து,  ‘VILLAGES OF GOA’ என்ற வாட்ஸ் அப்  குரூப்பில் ஆபாச  வீடியோ ஒன்று  பகிரப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த  கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர் புகார் அளித்துள்ளனர்.  அதில்,   துணை முதல்வர் சந்த்ரகாந்த் காவ்லேக்கர் மீது எப்.ஐ.ஆர் பதிவு  செய்யும்படி வற்புறுத்தப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   துணைமுதல்வர் சந்த்ரகாந்த் , ‘வாட்ஸ் அப்பில்  ஆபாச வீடியோ வெளியானது தனக்கு தெரியாது என்றும், இது, ஹேக்கர்களின் வேலை, இதுகுறித்துவிசாரிக்க  கோவா சைபர் பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில்  யோரோ விஷமிகள்  கைவரிசை காட்டியுள்ளதாகவும், அந்த சமயத்தில், தான் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், எனது போனை  பயன்படுத்தவே இல்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
சந்த்ரகாந்த் காவ்லேக்கர் கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி  சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்று, பின்னர்  பாஜகவில் இணைந்து,  துணை முதல்வர் பதவியை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.