கோவா: மாட்டிறைச்சி விவகாரத்தில் மாநில அரசு தோற்றுவிட்டது – ஆளும் அரசை சாடிய துணை சபாநாயகர்

மாட்டிறைச்சி தடை மீதான பிரச்சனையை கண்காணிப்பதில் கோவாவை ஆளும் பாஜக அரசு தவறிவிட்டதாக துணை சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் அரசு நடத்தும் இறைச்சி வளாகம் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை எழுந்த நிலையில் துணை சபாநாயகர் ஆளும் கட்சியை விமர்சித்தார்.

michael

பசுவதை என்ற பேரில் மாடுகளை கொல்லப்படுவதாகவும், அதனை தடுக்க முயல்வதாகவும் கர்நாடகாவில் சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதன் எதிரொலியாக கோவாவிற்கு கர்நாடகாவில் இருந்து கோவாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்ச்சிகளின் அளவு குறைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் மாநிலமான கோவாவில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு நடத்தும் வணிக வளாகம் கடந்த அக்டோபரில் இருந்து மூடப்பட்டுள்ளது. உடனடியாக இறைச்சி விற்பனையாகும் வளாகத்தை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற மானியங்கள் குறித்த விவாதத்தில் இந்த பிரச்சனை எழுந்தது. அப்போது பேசிய கோவாவின் துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ ”கடலோர மாநிலங்கள் மாட்டிறைச்சி பற்றாக்குறையை சமாளித்து வருகின்றன. ஆனால், பசுக்களை காப்பதாக செயல்படும் அமைப்புகளை கண்காணிப்பதில் ஆளும் கட்சி தோற்றுவிட்டது. மாநிலத்தில் பெரும்பாலான மக்கள் மாட்டிறைச்சியை விரும்புகின்றனர். அவர்களின் தேவையை நிறைவேற்றுவது மாநில அரசின் கடைமை ” என்று பாஜக ஆட்சியை சாடினார்.

cows

மேலும், பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மாநிலத்தின் எல்லைப்பகுதிகளில் நின்று கொண்டு மாநிலத்திற்கு வரும் மாட்டிறைச்சியை தடுக்கின்றனர். இந்த பிரச்சனையை சமாளிப்பதில் மாநில அரசு தோல்வியை கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் பசுவதை என்ற பிரச்சனை எழுந்ததில் இருந்து கோவா மாட்டிறைச்சி தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள வர்த்தகர்கள் போக்குவரத்து பிரச்சனை காரணமாக கோழி இறைச்சி மீது கவனம் செலுத்தி வருகின்றனர். பசுக்களை தூக்கிலிடுவதாக சிலர் புரளி பரப்பிவிட்ட நிலையில் இந்த பிரச்சனை தீவிரமடைந்ததாகவும் லோகோ கூறினார்.

பசுவதை உள்ளிட்ட தேவையற்ற காரணங்களால் கோவாவில் உள்ள மாட்டிறைச்சி வணிக வளாகங்கள் மூடப்பட்டதாக லோகோ சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ, ஆகஸ்ட் 22ம் தேதி முதல் மாட்டிறைச்சி விற்பனையாகும் வணிக வளாகங்கள் செயல்படும் என்று கூறினார்.

மாநிலத்திற்கு மாட்டிறைச்சி கொண்டுவருவதை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.