த்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர், சத்யபால் மாலிக்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அங்கு ஆளுநராக இருந்தார்.
பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு ,இப்போது கோவா ஆளுநராக இருக்கிறார்.

தனது சொந்த ஊரான பாக்பத்துக்கு நேற்று விஜயம் செய்தார். அவர்.
வரவேற்பு அளித்த மக்களிடையே பேசிய சத்யபால் மாலிக்,’’ மாநில ஆளுநர்களுக்கு ஒரு வேலையும் கிடையாது.
ஜம்மு-காஷ்மீரில் ஆளுநராக இருப்பவர்கள் குடிக்க வேண்டும். பின்னர் கொஞ்ச நேரம் ‘கோல்ப்’ விளையாட வேண்டும். அவ்வளவுதான்.நானும் அதைத்தான் செய்தேன்.

மற்ற மாநில ஆளுநர்களும், சும்மாதான் இருக்க வேண்டும். ஆளுநர் வாழ்க்கை ரொம்ப வசதியானது. அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தினம்தோறும் ஒதுங்கி இருக்க வேண்டும்’’ என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவா ஆளுநராக பதவி ஏற்றபோது கூட சத்யபால் மாலிக் இந்த ரீதியில் தான் பேசினார்.

’’ பிரச்சினைகள் நிறைந்த மாநிலத்தில் இருந்து மாற்றலாகி நான் இங்கே வந்துள்ளேன்.எனினும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.