கோவா முதல்வர் உடல்நிலை குறித்து தகவல் அளிக்க சுகாதாரத் துறை அமைச்சர்  மறுப்பு

னாஜி

கோவா சுகாதாரத்துறை அமைச்சர் முதல்வரின் உடல்நிலை குறித்து ஏதும் சொல்ல முடியாது என மறுத்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு மும்பை, டில்லி, கோவா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் கோவாவில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இன்று செய்தியாளர்கள் கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வர்ஜித் ரானே விடம் கோவா முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்தனர். அப்போது அவர், “கோவா முதல்வர் உடல்நிலை குறித்து நான் எதும் சொல்ல முடியாது. தற்போது முதல்வர் உடல்நலமின்றி உள்ளார். ஆனால் அது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் தகவல் கூற வேண்டுமே தவிர சுகாதார அமைச்சர் கூறக்கூடாது.

எந்த நேரத்திலும் ஏதாவது அதிசயம் நடக்கும் என நம்புங்கள். உடல்நலக் குறைபாட்டில் இருந்து மீண்டு வருவது என்பது மருத்துவ அறிவியலையும் மீறிய ஒரு விஷயம் ஆகும். ஆகவே நாம் அனைவரும் அவர் நலம் பெறுவார் என நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் உடல்நிலை குறித்து சுகாதார அமைச்சர் தகவல் கூற மறுப்பது கோவா மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed