பனாஜி: கோவாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதி வேகமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கோவா முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், பார்கள், உணவகங்களில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.