பனாஜி: தற்போது நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்து போட்டியில், கோவா அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற லீக் போட்டி, கோல்கள் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்ததை அடுத்து, அரையிறுதிக்குள் நுழைந்தது கோவா அணி.

கோவா அணி, இதுவரை மொத்தமாக ஆடிய 20 போட்டிகளில், 7 வெற்றி, 10 டிரா மற்றும் 3 தோல்வி என்று மொத்தமாக 31 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்தது.

இத்தொடரில், மும்பை, கொல்கத்தா மோகன் பகான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.