னாஜி

ரு பெண் தரகர் தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களைக் கேட்டுள்ளார்.

எரிவாயு மானியம், வங்கி அக்கவுண்ட், மொபைல் எண் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு தேவை என சொல்லப்பட்டுள்ளது.    இதைத் தொடர்ந்து சமூகவலை தளங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் ஆதார் கார்டு கேட்பார்கள் என நகைச்சுவை பதிவுகள் வந்துக் கொண்டு இருக்கிறது.   ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு இடத்தில் இருந்து ஆதார் தேவை என ஒரு தகவல் வந்துள்ளது.

டில்லியை சேர்ந்த ஒரு இளைஞர் தனது நண்பரின் பேச்சுலர் பார்ட்டிக்கு கோவா செல்ல இருந்தார்.  அவர் தன்னுடன் வரும் நண்பர்களுக்கும் சேர்ந்து ஐந்து பேருக்கு வடக்கு கோவா கடற்கரைப் பகுதியில் ஒரு ஓட்டலில் ரூம் புக் செய்துள்ளார்.  அத்துடன் உல்லாசத்துக்காக ஐந்து பெண்களை தனக்கு தெரிந்த ஒரு தரகர் மூலம் ஏற்பாடு செய்யச் சொல்லி உள்ளார்.

அவரிடம் இருந்து தகவல் வரும் என ஐவரும் ஆவலுடன் காத்திருந்த வேளையில் அந்த தரகர் இவர்களுடைய மொபைல் நம்பரை வைத்து இவர்கள் உண்மையானவர்களா என ஆராய்ந்துக் கொண்டு இருந்துள்ளார்.    இவர்கள் உண்மையிலேயே டில்லியில் இருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்துக் கொண்ட பின் அவர் இவர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார்.   அப்போது இவர்கள் அனைவருடைய ஆதார் அட்டைகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பச் சொல்லி உள்ளார்.   மேலும் இவர்கள் தங்கி உள்ள அறையின் சாவியை ஓட்டலின் பெயர் கொண்ட அட்டை தெரியுமாறும் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி உள்ளார்.

இதனால் டில்லி இளைஞர்கள் மிகவும் எரிச்சல் அடைந்துள்ளனர்.   அதே நேரத்தில் அந்த தரகர் தரப்பினர் அந்த ஓட்டல் இருக்கும் பகுதியில் ஏதும் ”அபாயம்” உள்ளதா என ஆராயத் துவங்கி உள்ளனர்.   அபாயம் என்பது அவர்கள் மொழியில் காவல்துறை நடவடிக்கை எனவே பொருள்.    தரகர்கள்  ஆதார் அட்டையை கேட்பதின் காரணமே அவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களா என்பதைக் கண்டறியவே என தரகர்கள் தரப்பு தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர், “கோவாவில் பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பும் தரகர்கள் எல்லா சோதனையும் செய்வது வழக்கமே.   ஆனால் அத்தனை சோதனைக்குப் பிறகும் அவர்கள் 5 அல்லது 10 பேரை ஒரே இடத்துக்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்.     காவல்துறையினர் சோதனை செய்து அத்தனை பெண்கள் சிக்கினால் அவர்களின் வருமானம் வெகுவக குறையும் என்பதே காரணம்.

அதே போல கோவாவில்  பெண் ”உதவியாளர்கள்” கிடைப்பார்கள் என பல விளம்பரங்கள் சமூக வலை தளங்களில் வருவதுண்டு.   அதில் 90% ஏமாற்றுக் காரர்களே உண்டு.   அதனால் கவனம் தேவை.   ஒரு முறை மாடியில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை தனது வாடிக்கையாளருக்கு காட்டி உள்ளார்.  அந்தப் பெண்ணும் இவரைப் பார்த்து கையசைத்து ஒரு பறக்கும் முத்தம் அனுப்பி உள்ளார்.   வாடிக்கையாளரும் திருப்தி அடைந்து ரூ. 4000 தரகரிடம் கொடுத்து விட்டு அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்குச் சென்று அந்த வீட்டின் கதவைத் தட்டிய போது  யாரும் திறக்கவில்லை.   மாறாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் (அவர்களும் தரகரின் ஆட்களே)  இந்த வாடிக்கையாளரிடம்  அத்து மீறி தங்கள் குடியிருப்பில் நுழைந்ததாகக் கூறி கூச்சலிட்டு விரட்டி அடித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.