கோவா பாரதியஜனதா ஆட்சி கவிழ்கிறது? ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி

 

கோவா:

கோவா அரசியலில்அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.  ஆட்சி அமைக்க காங்கிரஸ் கவர்னரிடம்  உரிமை கோர  உள்ளது. அப்போது  கவர்னர் மாளிகையில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தவும்  திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்றும் வரும் நிலையில், அங்கு அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற மற்ற கட்சிகளின் துணையுடன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.  இதன் காரணமாக கோவா பாரதியஜனதா ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

கோவாவில் கடந்த ஆண்டு  மார்ச் மாதம்  சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் தொங்கு சட்டசபை ஏற்பட்டது. அங்கு காங்கிரசை விட குறைந்த இடங்களையே பிடித்திருந்த பாரதியஜனதா சிறு சிறு கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரியது. அதன்படி பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவியேற்றார்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சுப்ரீம் கோர்ட், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து பனாஜியில் உள்ள ஆளுநர் மாளிகையில், மனோர் பாரிக்கருக்கு  ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து விட்டார்.

இந்நிலையில், தற்போது அங்கு அரசியல் மாற்றம் ஏற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளது. இதன் காரணமாக கோவா பாரதியஜனதா ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்த நிலையில், கோவாவில் காங்கிரஸ், தங்களை பதவி ஏற்க அழைக்குமாறு ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளது.

கோவாவின் மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்  சில்பா குமார் இன்று கோவாவிற்கு புறப்பட்டு செல்கிறார். அவர்  மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு,  தங்கள் கோரிக்கைகளை கொண்டு ஆட்சி அமைக்க நாளை கவர்னரை சந்தித்து உரிமை கோருவார் என்று கூறப்படுகிறது.