கராச்சி:
பாகிஸ்தான் நாட்டின் விமான நிறுவனமான, ’பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்’ கடந்த  பத்து வருடங்களாக எந்தவித விபத்தும் இன்றி செயல்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி,  இந் நிறுவனத்தின் பி.கே.661 ரக விமானம் ஒன்று ஹவேலியன் என்ற கிராமத்தில் விழுந்து

விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், 9 பெண்கள் உட்பட  47 பயணிகளும் பலியானார்கள்.
இதையடுத்து அந்நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.  பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மீண்டும் விமானம் இயக்க திட்டமிடப்பட்டது. அப்போது, விபத்து ஏற்படாமல் இருக்க ஆடு பலி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி விமான நிலைய அதிகாரிகள் ஒரு கருப்பு ஆட்டை, விமான ஓடுதளத்தில் வைத்து, கழுத்தை அறுத்து பலி கொடுத்தனர். இதனால், இனி  பாகிஸ்தான் ஏர்லைன்சின் விமானங்கள் விபத்துக்குள்ளாகாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.