ஆடு திருடனும், சங்கராமன் கொலையாளியும்: எஸ்.வி.சேகரை திணறடித்த ரிவீட்

 

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை கிண்டல் செய்யும்படியாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நகைச்சவைத் துணுக்கை பதிவிட.. அதற்கு பதிலடியாக  ஒருவர்,  சங்கர்ராமன் கொலை வழக்கைச் சொல்லி படு கிண்டலாக ரிவீட் செய்துள்ளார்.

எஸ்.வி.சேகர், தனது பக்கத்தில்..

“Just received from Delhi

நீதிபதி : போதிய சாட்சி இல்லாததால், நீ ஆடு திருடலைன்னு தீர்ப்பு சொல்றேன்.

குற்றம் சாட்டப்பட்டவர் : ரொம்ப நன்றி எஜமான்! அப்ப அந்த ஆட்டை நானே வச்சுக்கலாங்களா?” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாக ஆர். ராஜா செந்தில் குமார் என்பவரின் ரிவீட்:

“Just received from kanchi

நீதிபதி: போதிய சாட்சி இல்லாததால் நீ சங்கராமனை கொலை செய்யவில்லைனு தீர்ப்பு சொல்றேன்.

குற்றம் சாட்டப்பட்டவர்: ரொம்ப நன்றி எஜமான்! அந்த கத்தியை தூக்கிப் போட்ரலாமா?”

# இது எப்படி இருக்கு?