‘அமித்ஷா திரும்பிப் போ’: டுவிட்டரில் இன்று டிரெண்டிங்கான ஹாஷ்டேக்

சென்னை

‘அமித்ஷா திரும்பிப் போ’ என்று டுவிட்டர் சமூக வலைதளத்தில் இன்று ஹாஸ்டேக் டிரென்டிங்காகி வருகிறது. தமிழக தமிழக பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 12ந்தேதி ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க  சென்னை வருகையின்போது, #GoBackModi என்ற ஹாஸ் டேக் உலக அளவில் டிரெண்டிங்கான நிலையில் தற்போது , பாஜக தேசிய தலைவரின் அமித்ஷாவின் சென்னை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,  #GobackAmitShah என்ற ஹாஸ்டேக டுவிட்டரில் டிரெண்டிங்காகி உள்ளது.

இன்று சென்னை வந்துள்ள அமித்ஷாவுக்கு சமூக வலைதளமான டுவிட்டரில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவரை சுமார் 13ஆயிரம் பேர் #GobackAmitShah என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அமித்ஷா மீதான எதிர்ப்பு குறித்த டுவிட்டர் டிரெண்டிங் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது.

அமித்ஷாவின் தமிழக விஜயத்திற்கு, இந்த அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது தமிழக பாரதியஜனதா தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: '#GobackAmitShah' trending on Twitter ahead of BJP president’s, 'அமித்ஷா திரும்பிப் போ': டுவிட்டரில் இன்று டிரெண்டிங்கான ஹாஷ்டேக்
-=-