கடவுள் ஒருவரே; மனிதர்களுக்குள் வெறுப்பை விதைக்காதீர்கள்! ஹர்பஜன் சிங் டிவிட்

சண்டிகர்:

டவுள் ஒருவரே; மனிதர்களுக்குள் வெறுப்பை விதைக்காதீர்கள், இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தாக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

சீக்கியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் குருநானக் பிறந்த இடமான பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவில் ஒரு கும்பல் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து  வன்முறையை தூண்டும் வகையில் சில இஸ்லாமியர்கள் பேசிய நிலையில், குருத்வாராவுக்கு செல்லும்  சீக்கிய யாத்ரிகள் மீது கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றது. அப்போது பேசிய  ஹசனும், முகமது இம்ரானும்,சீக்கிய குருதுவாராவை அடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என பகிரங்கமாக பேசினர். அவர்களின் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில்,   இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், அந்த வீடியோவை பதிவிட்டு, இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட் போட்டுள்ளார்.

அந்த டிவிட்டில்,  கடவுள் ஒருவர்தான். அவரைப் பிரிக்காதீர். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை வளர்க்கா தீர்கள்…. முதலில் மனிதர்களாக வாழ்வோம், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்போம். குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவோம் என்று முகமது ஹசன் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருப்பது குறித்து பிரதமர் இம்ரான் கான் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.