சாமியார் ராம்பால் 2 கொலை வழக்குகளில் குற்றவாளி: அரியானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அம்பாலா:

ரியானாவை சேர்ந்த பிரபல சாமியார் மீதான  2 கொலை வழக்குகளில் அவர் குற்றவாளி என அரியானா நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அவரது தண்டனை விவரம் வரும் 16 மற்றும் 17ந்தேதிகளில் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமியார் ராம்பால்.  தற்போது 68 வயதாகும் ராம்பால் கடந்த  2006 ம் ஆண்டு, தனக்கு எதிராக புகார் அளித்த  கிராமத்தினர் சிலர் மீது தீ வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாகவும், இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்தார் மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

மேலும், அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமியார் ராம்பால். இவரி காண வந்த டில்லி மித்தாபூரைச் சேர்ந்த ஷிவ்பால் என்பவரின் மனைவியை, ஆசிரமத்தில் ராம்பால் அடைத்து வைத்த நிலையில், அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கடந்த   2014-ம் ஆண்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்கள் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 2 வழக்குகளில் சாமியார் ராம்பால் மற்றும் அவரது சீடர்களும்  குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் வரும் 16 மற்றும் 17-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ராம்பாலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஹிசாரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.