Random image

புல்லட் ரெயில் : நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கும் கோத்ரெஜ்

மும்பை

புல்லட் ரெயில் திட்டத்துக்காக தங்கள் நிலம் கையக்கப்படுத்துவதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கோத்ரெஜ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.   இந்த விழாவில்  மோடியும் ஜப்பானிய பிரதமர் அபேயும் கலந்துக் கொண்டனர்.  தற்போது இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.   இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மக்களும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த திட்டத்துக்காக மும்பையின் விக்ரோலி பகுதியில் உள்ள நிலம் கையகப்படுத்த உள்ளது.   இந்த நிலம் கோத்ரெஜ் நிறுவனத்துக்கு சொந்தமான இடம் ஆகும்.   இதில் இந்த நிறுவனம் ஏற்கனவே தங்கள் உபயோகத்தில் வைத்துள்ளது.   மேலும் பல கோடி ரூபாய் செலவில் இந்த நிலத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.    இந்நிலையில் இந்த இடத்தில் புல்லட் ரெயில் திட்டம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.   தற்போது இந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ரூ55 கோடி முதல் ரூ 65  கோடி வரை உள்ளது.

இது குறித்து கோத்ரெஜ் நிறுவ்னம், “புல்லட் ரெயிலுக்காக கையகப்படுத்தப் படும் விவசாய நிலங்களுக்கு 5 மடங்கு இழப்பீடு அளிக்க உள்ளதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது.  ஆனால் நிறுவனங்களில் நிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பு மதிப்பீடு மாறு படுகிறது.   இங்கு கோத்ரெஜ் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்கள் பல வகைகளில் உள்ளன.   இதனால் இந்த நிலங்களுக்கு இழப்பு மதிப்பீடு செய்வது கடினம்” எனக் கூறி உள்ளது.    அத்துடன் இந்த நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு கோத்ரெஜ் நிறுவனத்துக்கு சாதகமாக இருந்தால் புல்லட் ரெயில் திட்டத்தின் பாதையில் மாறுதல் செய்ய நேரிடும்.   அல்லது எதிராக அமைந்தால் அரசு நில கையகப்படுத்தப்படும் சட்டத்தின் கீழ்  இந்த நிலம் கையகப் படுத்தப் படும்.

You may have missed