ஆண்டவன் குடுத்த பரிசு இந்த நேசமணி : வடிவேலு

‘Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், சுத்தியல் புகைப்படத்திற்கு , விக்னேஷ் பிரபாகர் என்பவரது காமெடி கருத்தால், உலகளவில் ட்ரெண்டானது #Pray_for_Neasamani.

சமூக வலைதளங்களில் அனைவருமே இந்த ஹேஷ்டேக்கில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர்.

கான்ட்ராக்டர் நேசமணி பெரும் வைரலாகி வருவதால், திருப்பூரில் உள்ள பல்வேறு டி-ஷர்ட் நிறுவனங்களில் நேசமணி உருவம் பொறித்த டி-ஷர்ட்டுகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் உலகளவில் Pray For Nesamani என்ற ஹேஸ்டேக் பிரபலமானது குறித்து வடிவேலு “அது போன்ற கேரக்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தனக்கு அளித்த பரிசு. ” என எளிமையாக தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி