போபால்:

காத்மா காந்தியைக் கொன்ற கேட்சேவின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளது போபார் தொகுதியில் பாஜக வேட்பாளர் இளம்பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர் வெற்றி குறித்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் முதல்வர்  திக்விஜய் சிங் வேதனை தெரிவித்து உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில், ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து   சர்ச்சை சாமியாரினியான சாத்வி பிரக்யாவை பாஜக களமிறக்கியது. இதன் காரணமாக அங்கு போட்டி கடுமையானது.

திக்விஜய்சிங்குக்கு ஆதரவாக சாமியாரில் ஒருபிரிவு கம்ப்யூட்டர் பாபா எனப்படும் பிரபல சாமியார் தலைமையில் ஏராளமான சாதுக்கள் களமிறங்கி  திக்விஜய் சிங்குக்கு ஆதரவு திரட்டினர்.  ஆனால்   இந்துத்துவாவை முன்னிறுத்தி, சாத்வி பிரக்யா சிங் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சினைகளையும் உருவாகி  வந்தார்.

இந்த நிலையில், கமலின் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய பிரக்யா, கோட்சே குறித்துபேசி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இது நாடு முழுவதும் மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக தலைமையின் அறிவுறுத்தலின்பேரில்  மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், நடைபெற்ற தேர்தலில் திக்விஜய்சிங்கை தோற்கடித்து பிரக்யாசிங் அமோக வெற்றி பெற்றார். இதனால் வேதனை அடைந்த திக்விஜய் சிங், நாட்டில் இன்று, மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவின் சித்தாந்தம் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மகாத்மா காந்தியின் கொள்கை தோல்வி அடைந்துள்ளது என்று வேதனையுடன் கூறினார்.