சென்னை: கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா,  உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.  தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு. தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவைப்படுகிறது என்றார்.

தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது என்றார்.