கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக மாவட்ட அளவிலான திட்டத்தை தயாரிக்க,சுகாதாரத் துறையினருக்கு நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் சுற்றறிக்கை…

சென்னை:  தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக மாவட்ட அளவிலான திட்டத்தை தயாரிக்க, சம்பந்தபட்ட துறையினருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டு உள்ளார்.

அதில்,  கோவிட் 19 க்கு எதிரான தடுப்பூசியைஇந்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுக்கும்படி, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும்,   சுகாதார சேவைகளின் அனைத்து துணை இயக்குநர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எதிர்காலத்தில் கோவிட் 19 க்கு எதிரான  தடுப்பூசிக்கான எச்.எஸ்.சி / பி.எச்.சி / மாவட்ட அளவிலான மைக்ரோ திட்டத்தை தயாரிக்க சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அறிவுறுத்தும்படி,  மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த மைக்ரோ திட்டத்தை தயாரித்து, அதை,   15-10-2020 அல்லது அதற்கு முன்னர் தமிழக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய செல்வவிநாயகம், கொரோனா தடுப்பூசி குறித்து, நுண்ணிய திட்டங்களை ஒருங்கிணைத்து அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அதை  இயக்குநரகத் திற்கு அனுப்புமாறு கேட்கப்பட்டு உள்ளது.  தடுப்பூசி ருத்துவ பரிசோதனைகளில் , நல்ல செயல்திறன் நிரூபிக்கப்பட்டால், வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தும் என்றும்,  மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) தெரிவித்து இருப்பதாக கூறினார்.
மேலும்,  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை நாடு தழுவிய அளவில் சோதனை செய்வதில் தமிழகமும் ஒரு பகுதி என்றவர், தடுப்பூசி சோதனைக்கு நாங்கள் தயாராக இருக்க விரும்புகிறோம், எனவே மருந்து கிடைத்தவுடன் தடுப்பூசிகள் தொடங்கப்படும், இதற்காக மைக்ரோ திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி போடப்படும் இடம், மற்றும் செயல்முறை ஆகியவற்றை அடையாளம் காணும் வகையில் மைக்ரோ திட்டம் உருவாக்கும்  நடவடிக்கைகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
மாவட்டத்தின் மனித வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தேவைகளை கவனத்தில் கொண்டு, தடுப்பூசிக்கான  சோதனைகளை உறுதி செய்வதே,
 மைக்ரோ திட்டம்” என்றவர்,  அதன்படி,  கோவிட் -19 தடுப்பூசிக்கான திட்டம் சுகாதார மாவட்டங்களின் மாவட்டம், பி.எச்.சி மற்றும் எச்.எஸ்.சி மட்டத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைப் பின்பற்றும்.
காவல்துறை மற்றும் வருவாய் துறைகளின் அதிகாரிகளுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் விவரங்கள் இதில் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்கள் போன்ற கொமொர்பிட் நிலைமைகளைக் கொண்டவர்களின் வரி பட்டியல் தயாரிக்கப்படும். இதனால், தடுப்பூசி தயாராக இருக்கும்போது அதை பொதுமக்களுக்கு விரைவாக எடுத்துச் செல்வதை அரசு உறுதி செய்யப்படும் என்றார்.