புதுடெல்லி:

வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்


2019-ம் ஆண்டு இது தொடர்பாக குடியேற்ற மசோதாவை கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சட்ட முன்வடிவு தாக்கல் செய்யும் முன் பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுடது. இதற்கான கருத்துக் கேட்பு ஜனவரி 9-ம் தேதியிலிருந்து தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ” வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணாக்கர்கள் பதிவு செய்யும் முறை இணையம் மூலமாகவே இருக்கும். கல்வியோடு வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கும் இந்த பதிவு முறை பொருந்தும்.

ஐக்கிய அரசு அமீரகம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், இந்தோனேஷியா, ஈராக்,ஜோர்டான், குவைத், லெபனான், லிபியா, மலேசியா,ஒமன், கத்தார், சவுதி அரேபியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, தாய்லாந்து மற்றும் ஏமன் ஆகிய 18 நாடுகளுக்கு செல்வோர் பதிவு செய்யும் முறை முதல் கட்டமாக அமல்படுத்தப்படும்.

வெளிநாடுகளுக்கு செல்வோரின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் நலனுக்காகவும் இந்த பதிவு முறை பயன்படும்.
மாணர்வகளை வெளிநாடுகளுக்கு தேர்வு செய்து அனுப்பும் ஏஜென்ஸிகளும் தங்கள் விவரத்தை பதிவு செய்யும் முறையும் இந்த மசோதாவில் அடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.