அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி, வளர்மதி பின்தங்குகிறார்

--

a

சென்னை:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. அதில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி அடைந்தார்.  ஆயிரம் விளக்கு தொகுதியில் அமைச்சர் வளர்மதி பின்தங்கியுள்ளார்.

இன்று வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன்,  எம்.கே. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கு.க. செல்வம், ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.  அமைச்சர்கள் வளர்மதியும், அமைச்சர் கோகுல இந்திராவும் பின்னடைவை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாநகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திரா தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் எம்.கே.மோகன் வெற்றி பெற்றார்.

இந்தத் தொகுதி பொதுவாகவே திமுகவுக்கு ஆதரவானது. இங்கு திமுக தலைவர் கருணாநிதி 2 முறையும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஒருமுறையும், திமுக முன்னாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை நடந்த தேர்தலில் முதல்முறையாக அண்ணாநகர் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட கோகுல இந்திரா எம்எல்ஏ ஆனார்.அவருக்கு அமைச்சர் பதவி வழங்கபப்பட்டது.

இந்த முறை சிட்டிங் எம்.எல்.ஏவாக அண்ணாநகரில் களமிறங்கிய கோகுல இந்திரா  தோல்வியை தழுவியுள்ளார்.