பெங்களூரு

ர்நாடகா சட்டசபையின் வைரவிழாவை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு தங்க பிஸ்கட்டுகள் வழங்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

கர்நாடக சட்டசபை இந்த வருடம் தனது வைரவிழாவைக் கொண்டாடுகிறது.   இதற்காக சட்டசபை பணியாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மேல்சபை உறுப்பினர்களுக்கு அடையாளப் பரிசுகள் வழங்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.  இவைகள் அனத்தும் இன்னும் திட்ட வடிவில் உள்ளதாகவும் முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் சபாநாயகர் கோலிவாட் தெரிவித்தார்.

அவர் இது பற்றி, “சட்டசபையின் வைரவிழா கொண்டாட்டங்கள் விமரிசையாக விதான் சவுதாவில் நடை பெற உள்ளது.  இந்த விழாவையொட்டி அடையாளப் பரிசாக சட்டசபை மற்றும் மேல்சபை ஊழியர்களுக்கு ரூ.6000 மதிப்புள்ள வெள்ளித்தட்டுகள் வழங்கவும்,  சட்டசபை மற்றும் மேல்சபை உறுப்பினர்களுக்கு ரூ.55000 மதிப்பில் 13 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகள் வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.   இந்த தட்டுகளிலும் பிஸ்கட்டுகளிலும் அரசு முத்திரையும் விதான் சவுதாவின் படமும் பொறிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் திட்டங்கள் வடிவில் உள்ளன   முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட உள்ளது.   அவர் நிதி அமைச்சகத்துடன் கலந்துக் கொண்டு பின் ஒப்புதல் அளிப்பார்.: என தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புக்கள் வலுவாக உள்ளது.  ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தினேஷ் குண்டுராவ், “நாநிலம் இருக்கும் நிலையில் இது போன்ற திட்டங்கள் தேவை இல்லை.   மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வீணடிப்பதை விட அரசு சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது அறிவிக்கலாம்.    நான் இது குறித்து முதல்வருடன் விரைவில் பேச உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.   பா ஜ க வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ், “மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன.  இந்த நேரத்தில் கொண்டாட்டமும், அடையாளப் பரிசுகளும் தேவை இல்லை” எனக் கூறி உள்ளார்.