சூரத் நகரில் மோடியின் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் விற்பனை

சூரத்

மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் சூரத்நகரில் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி வரும் தாந்திரியாஸ் என்னும் பண்டிகை வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த பண்டிகையின் போது நடக்கும் பூஜையில் அனைத்துக் கடவுள்கள் உருவம் பதித்த பொருட்களை வைத்து பூஜை நடத்துவது வழக்கமாகும்.

தீபாவளி அன்று இரவு அல்லது அடுத்த நாள் இந்த தாந்திரியாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையில் முக்கியமாக லட்சுமி, மற்ரும் விநாயகர் உருவம் பதித்த பொருட்களை குறிப்பாக தங்கக் கட்டிகளை வைத்து வழிபடுவது செல்வந்தர்களின் வழக்கமாகும்.

இந்த வருடம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பிரதமர் மோடியின் உருவம் பதித்த தங்கக் கட்டிகள் விற்பனை ஆகி வருகின்றன. சூரத் நகரில் உள்ள ஒரு பாஜக வணிகர் தங்களுக்கு மோடி கடவுள் போல உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பாஜக அல்லாத வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடவுள்கள் உருவம் மட்டுமே இந்த பூஜையில் வைக்க வேண்டும் எனவும் மனிதர்களின் மற்றும் உயிருடன் இருப்பவர்களின் உருவத்தை பூஜிக்கக் கூடாது என அவர்கள் கூறி உள்ளனர்.