ரூ.32ஆயிரத்தை தாண்டியது: தகிக்கும் தங்கத்தின் விலை….

 

சென்னை:

மிழகத்தில் தங்கம் விலை இன்று கிராமுக்கு 36 ரூபாய் கூடி,  பவுனுக்கு 288 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய 22 காரம் தங்கத்தின் விலை சரவன் 32096 ஆகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுபோலவே 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சரவன் ரூ. 33704 ஆக உயர்ந்து உள்ளது.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  மேலும், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி, ரூபாய் நோட்டு பதிப்பு போன்ற காரணமாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது… தற்போது சரவன் ஆபரணத் தங்கம் ரூ.32 ஆயிரத்தை தாண்டி சென்றுகொண்டிருகிறது…

இது ஏழை நடுத்த மக்களுக்கு பாதிப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,  முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.