ஆசிய பாராலிம்பிக்கில் 7வது தங்கப்பதக்கத்தை பதிவு செய்த இந்தியா – வில்வித்தையில் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று சாதனை

ஆசிய பாராலிம்பிக் போட்டியின் வில்வித்தையில் இந்தியாவை சேர்ந்த ஹர்விந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவிற்கு ஏழாவது தங்கத்தை ஹர்விந்தர் சிங் பெற்றுத் தந்துள்ளார்.

harvindar

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் ஆசிய பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் என மொத்தமாக 302 பேர் கலந்து கொள்கின்றனர்.

போட்டி தொடங்கிய நாளில் இருந்தே இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியின் தனிநபர் ரிக்கர்வ் பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் பங்கேற்றார். இவர் சீன வீரர் ஜாவ் லிக்ஸியை 6-0 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 7வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இதேபோல தடகளப்போட்டிகளின் வட்டு எறிதலில் இந்தியாவின் மானு கங்னாஸ் வெள்ளிப்பதக்கமும், குண்டு எறிதலில் யாசீர் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளர்.