தாலிக்கு தங்கம்: ஜெ.வின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்த கர்நாடக பா.ஜ!

--

பெங்களூர்:

ர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, பாரதிய கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று காலை வெளியிட்டது. மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவரும்  முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா இன்று வெளியிட்டார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பாஜ தேர்தல் அறிக்கை இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இலவசங்களை எதிர்த்து வரும் மத்திய பாஜக அரசு தற்போது பல்வேறு இலவச திட்டங்களையும் கவர்ச்சி திட்டங்களையும் கர்நாடகாவில் அறிவித்து உள்ளது.

இந்த தேர்தல் அறிக்கை, முழுக்க முழுக்க  ஜெ.முதல்வராக இருந்தபோது அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையின் நகலாகவே உள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு…

விவாக மங்கலா என்ற திட்டத்தை கொண்டு ருவோம் என்றும், இந்த திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள பெண்கள் திருமணத்திற்கு தாலி செய்ய உதவும் வகையில், 3 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அம்மா உணவகம் போல, கர்நாடகாவில் அன்னபூர்ணா உணவகம் திறக்கப்படும் 

பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு 1 சதவீத வட்டியில் ரூ2 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும்.

ஸ்ரீ சுவிதா திட்டம் என்ற பெயரில் திட்டம் கொண்டுவரப்படும், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாகவும், பிற பெண்களுக்கு ரூ.1 விலையிலும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும்.

முக்கிய மந்திரி ஸ்மார்ட் போன் திட்டத்தின்கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களும் இதில் அடங்கும்.

அரசு அமைந்ததும், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெங்களூரில் கித்தூர் ராணி சென்னம்மா பறக்கும் படை என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக போலீசில் தனி பிரிவு உருவாக்கப்படும். உதவி தேவைப்படும் பெண்களை உடனடியாக இந்த படை தொடர்பு கொள்ளும்.

2023க்குள் 1.5 லட்சம் கோடி செலவில் நீர்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கர்நாடகாவில் சுற்றுலாவை வளர்க்க ரூ.2,500 கோடி ஒதுக்கப்படும்.

நிலுவையிலுள்ள பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க பெண் அதிகாரி தலைமையில் 1000 பெண் போலீசாரை கொண்ட பிரிவு உருவாக்கப்படும்.

ஆனால் மாநிலத்தின் முக்கிய பிரச்சினையான காவிரி விவகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. காங். தேர்தல் அறிக்கையிலும் காவிரி பற்றி குறிப்பிடவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் பல்வேறு இலவச திட்டங்களுக்கான அறிவிப்புகளை வழங்கி அதிமுக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து வந்தது.

இதற்கு பாரதியஜனதா கட்சியும், மத்திய அரசும்  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இலவசங்களால் தமிழகம் பெரும் சரிவை சந்திக்கிறது என்றும், நிதி பற்றாக்குறை ஏற்படுவதாகவும் புகார் கூறியது.

இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஜெயலிதாவின் தேர்தல் அறிக்கையை காப்பியடித்து, பாரதியஜனதா தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு உள்ளது.

திமுக பாணியிலேயே பாணியிலேயே இலவசங்களை வாரி விதைத்துள்ளது. பெண்களின் வாக்குகளை கருத்தில்கொண்டு பாரதியஜனதா தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.