துடுப்புபடகு போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்

ஜகர்தா:

ந்தோனேசியாவில்  இன்று 6வது நாளாக  ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆடவர் பிரிவு தங்கம் வென்றுள்ளது.

ஏற்கனவே ஆடவருக்கான ஒற்றையர் படகு  போட்டியில்,  இந்தியாவின் துஷ்யந்த் வெண்கல பதக்கம் வென்ற நிலையில், குழுவினருக்கான  துடுப்புபடகு போட்டியில் ஆடவர் பிரிவில் இந்தியா வெற்றி பெற்று தங்கம் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியா சார்பில், சுவர்ண்சிங், டட்டு, ஓம்பிரகாஷ், சுக்மீத் ஆகியோர் பங்கேற்றனர்.

மற்றொரு இரட்டை பங்குபெறும் துடுப்பு படகு ஓட்டுதல் போட்டியிலும், இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித்குமார், பகவான் சிங் பங்கேற்று 3வது பரிசை வென்றனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9 வது இடத்தில் உள்ளது.
45 நாடுகள் பங்கேற்றுள்ள 8_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18ந்தேதி முதல்  நடைபெற்று வருகின்றன. ெப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.