தங்கம் வென்ற ஸ்வப்னா!  கடவுள் சிலை முன் விழுந்து கதறி ஆனந்தக் கண்ணீர்விட்ட தாய்!

சிய விளையாட்டில் ஹெப்டாத்லான் விளையாட்டில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். இந்தியா முதன்முறையாக இந்த விளையாட்டில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அவரது தந்தை ரிக்க்ஷா ஓட்டுகிறார். தவிர தற்போது படுக்கையில் உடல்நலம் குன்றி இருக்கிறார். அவரது தாய் தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

இப்படி வறுமையான பின்னணியில் இருந்து வந்த ஸ்வப்னா தனது  கடுமையான உழைப்பின் பயனாக ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அவர் தங்கம் வென்ற காட்சியை தொலைக்காட்சியில் கண்ட அவரது தாய் ஆனந்தத்தில் கதறி அழும் காட்சிகள் வெளியாகி நெகிழவைக்கிறது.

ஸ்வப்னா தங்கம் வென்றார் என்ற தகவலை தொலைகாட்சியில் கண்ட அவரது தாய் “ஓ” என கதறி அழுகிறார். தொடர்ந்து, தன் வீட்டில் சிறிதாக அமைக்கப்பட்ட காளி சிலை முன் விழுந்து கதறி அழுகிறார்.

ஸ்வப்னா பங்கேற்ற போட்டி தொடங்கியது முதல் அவர் அந்த காளி சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டு இருந்தார்.

ஸ்வப்னா இந்த போட்டியில் கடுமையான பல் வலியோடு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.