சென்னை

ர்நாடகா அரசு வேலவாய்ப்பு அளித்து உதவியது போல் தமக்கு தமிழக அரசும் உதவ வேண்டும் என தங்க மங்கை கோமதி தெரிவித்துள்ளார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி தங்கப்பதக்கம் வென்றார். மிகவும் வறுமை நிலையில் இருந்த கோமதி தனது விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சியினால் இந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.

அப்போது கோமதி, “நான் இளமையில் கடும் வறுமையில் இருந்தேன். ஓட்டப் பந்தயத்துக்கு தேவையான சிறப்பு காலணிகளைக் கூட வாங்க பணமில்லாமல் இருந்தேன். ஆயினும் இந்த போட்டியில் வென்று தங்க பதக்கம் பெற வேண்டும் என இடைவிடாமல் பயிற்சி செய்து வந்தேன்.

பணம் இல்லாததால் இந்த பயிற்சி முகாமில் நான் ஒரு மாதம் தாமதமாக சேர்ந்தேன். இந்திய அரசு எனக்கு பயிற்சிக்கு உதவாததால் எனது சொந்தப்பணத்தில் நான் பயிற்சிகளை மேற்கொண்டேன். எனக்கு பயிற்சிகளை தொலைபேசி மூலம் இந்திய பயிற்சியாளர் பாட்டியா வழங்கி உள்ளார்.

எனக்கு கர்நாடக அரசு வேலைவாய்ப்பு அளித்தது பெரும் உதவியாக உள்ளது. அதை என்னால் என்றும் மறக்க முடியாது. எனது சொந்த மாநிலமான தமிழகத்தில் எனக்கு வேலைவாய்பு அளிக்க தமிழக அரசு முன்வரவேண்டும். அது எனக்கு மேலும் உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.