சரித்திரம் காணாத விலை உயர்வில் தங்கம்

--

 

டில்லி

டில்லியில் தங்கம் நேற்று சரித்திரம் காணாத அளவில் கிராமுக்கு ரூ. 3792 ஆக உயர்ந்துள்ளது.

உலகெங்கும் தற்போது பல நாட்டு நாணய மதிப்பு தொடர்ந்து குறைந்துக் கொண்டு வருகிறது.   பல முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.  எனவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தற்போது தங்கத்தின் பக்கம் திருப்பி உள்ளனர்.   இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகும்.

தங்கம் விலை உயரும் போது வெள்ளியின் விலையும் உயர்வது வழக்கமாக உள்ளது.  சர்வதேச தங்கச் சந்தையான நியூயார்க்கில் நேற்று தங்கம் ஒரு அவுன்ஸ் $1487.20க்கு விற்கப்பட்டது.  வெள்ளி ஓர் அவுன்ஸ் $18.83 ஆக இருந்தது.  இந்த விலை உயர்வு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது.

டில்லியில் உள்ளூர் சந்தியில் 10 கீரம் தங்கம் ரூ.37,920க்கு விற்கப்பட்டுள்ளது.  சரித்திரத்தில்  முதல் முறையாக தங்கம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது.  கடந்த திங்கள் அன்று 10 கிராம் தங்கம் விலை ரூ. 36,970 ஆக இருந்துள்ளது.  ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் ரூ.37,800க்கு விற்கப்பட்டது.

வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.43,670க்கு விற்கப்பட்டுள்ளது. வெள்ளி நாணயங்களின் வாங்கும் விலை 100 நாணயங்களுக்கு ரூ.86000 ஆக இருந்தது.  வெள்ளி நாணயங்களின் விற்பனை விலை 100 நாணயங்களுக்கு  ரூ.87000 ஆக உள்ளது.