கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்நிறுவனங்களும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிகரிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆனால், பொருளாதார மந்த நிலை காரணமாக, முதலீட்டார்கள் தங்கம் மீது கவனம் செலுத்தியதால், விலை உயர்வு என்று கூறப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை 2020ம் ஆண்டு தொடக்கம் முதலே அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சவரன் விலை 30ஆயிரம் அளவிலேயே இருந்து வந்த நிலையில், தற்போது சரவன் விலை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் விலை உயர்வானது விண்ணணை நோக்கி பறந்தது. கடந்த மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தாண்டி, அதிகபட்சமாக ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி அன்று ஒரு பவுன் தங்கத்தின் ரூ.43 ஆயிரத்து 328 விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல சரிவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் வந்துகொண்டிருந்த விலை சரிவு இன்று காலை பவுனுக்கு 360 ரூபாய் குறைந்து 39,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த 18 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு 3,776 ரூபாய் குறைந்துள்ளது.
குறைந்து வரும் விலை உயர்வு பொதுமக்களுக்கு சற்றே ஆறுதலை தந்துள்ளது. மேலும் குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.