பூர்ணாவை மிரட்டிய தங்க கடத்தல் கும்பல்.. விசாரணையில் பரபரப்பு.

கராறு, சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தற்போது கேரளாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் தன்னை ஒரு கும்பல் திருமணம் செய்யச் சொல்லி மிரட்டி பிளாக்மைல் செய்து பணம் பறிக்க முயன்றதாக கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத் தியது.


இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் பல திடுக் கிடும் தகவல்கள் வெளியாகி வருகின் றன. இந்த வழக்கு தொடர்பாக மலை யாள நடிகர் தர்மஜன் போல்கட்டிஎன்ப வரை போலீஸார் அழைத்து விசாரித் தனர்.


விசாரணையில் தான் அளித்த வாக்குமூலம் பற்றி ஊடகங்களுக்கு தர்மஜன் கூறினார். அப்போது, ’சில வாரங்களுக்கு முன் சிலர் என்னை தொடர்புகொண்டு தாங்கள் தங்க கடத்தல் பிஸ்னஸ் செய்வதாகவும் நடிகைகள் பூர்ணா, மியா ஜார்ஜ் போன் நம்பர் தரக்கேட்டனர். இதனால் கோடி களில் வியாபாரம் நடக்கும் என்றனர், ஆனால் என்னை வியாபாரத்தில் ஈடுபட கேட்கவில்லை. நடிகைகளின் நம்பர்கள் மட்டும் கேட்டனர். அவர்கள் தொடர்ந்து என்னை வற்புறுத்தியபோது போலீசில் புகார் செய்வேன் என்று மிரட்டினேன், அதன்பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவில்லை’ என்றார்,

கார்ட்டூன் கேலரி