தங்க கடத்தல் வழக்கு: கேரள அமைச்சரிடம்  அமலாக்கத்துறை  6 மணி நேரம் விசாரணை..

கேரள மாநிலத்தில் உயர் கல்வி துறை அமைச்சராக இருப்பவர், கே.டி.ஜலீல்.

தங்க கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிகளுடன் ஜலாலுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரை , அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

அதன்படி ஜலீல், கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளதால் அமைச்சர் ஜலீல், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கேரள மாநில காங்கிரஸ் கட்சியும், பா.ஜ,.க.வும் வலியுறுத்தியுள்ளன.

’’ பல்வேறு பொருளாதார குற்றங்களில் அமைச்சர் ஜலாலும், முதல்-அமைச்சர் பினராயி விஜயனும் ‘பார்ட்னர்கள்’’ என்பதால் , ஜலீலை பதவி விலகுமாறு கூறுவதற்கு முதல்வர் அஞ்சுகிறார்’’ என பா.ஜ,க. மாநில தலைவர் கே.சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

-பா.பாரதி.