‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு மத்தியஅரசு பரிசு! விஜய்கோயல் வழங்கினார்!!

டில்லி,

பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

mari1

பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் மகளிர் பேட்மிண்டன் பிரிவில், பிவி சிந்து வெள்ளி பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல், அதையடுத்து நடைபெற்ற  பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, உயரம் தாண்டுதலில் மாரியப்பன் உள்ளிட்டோர் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.  தங்கம் வென்றோருக்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளி வாங்கியோருக்கு 50 லட்சமும், வெண்கலம் கைப்பற்றியவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

sports

இதனையடுத்து ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில், பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரொக்கப்பணம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இந்த விழாவில் பங்கேற்க முடியாத வீரர்களின் உறவினர்களிடம் காசோலைகள் வழங்கப்பட்டன.

இந்த பரிசுத்தொகையை வழங்கி பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய்கோயல், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாராலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

ரொக்கப்பரிசு பெற்ற தமிழக வீரர் தங்கமகன் மாரியப்பன் பேசும்போது, மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதியுதவிகள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

 

கார்ட்டூன் கேலரி