2021 பிப்ரவரியில் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா என அறிவிப்பு….!

கொரோனா ஊரடங்கு நிலவுவதாலும், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும் கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழா, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கரைப் போல அல்லாமல், கோல்டன் க்ளோப் விருது விழா ஒரு ஹோட்டலில், இரவு நேர விருந்து போலத்தான் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர் .

நடிகைகள் டினா ஃபே மற்றும் ஏமி போலர் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள்.

ஒவ்வொரு வருடமும் வழக்கமாக விருது வழங்கும் விழாக்களுக்குத் தொடக்கப் புள்ளியாக தான் இந்த கோல்டன் க்ளோப் பார்க்கப்படுகிறது.