தாஜ்மஹால் ஓட்டலுக்குத் தங்கத்திலே மனசு


மும்பையின் அடையாளம்’ தாஜ்மஹால் பேலஸ்’ ஓட்டல்.

1903 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஓட்டல்-

‘கேட் வே ஆஃப் இந்தியா’ வின் அருகாமையில் உள்ளது.

285 அறைகள், 9 ரெஸ்டாரெண்டுகள் என அப்போதே பிரமிக்க வைக்கும் மாளிகையாக உருவாக்கப்பட்ட இந்த ஓட்டல் தான் – இந்தியாவின் முதல் சொகுசு விடுதி.

விடுமுறையில் பொழுதைக் கழிக்க மும்பை பறந்து வரும் சர்வதேச பணக்காரர்களின் உறைவிடம் ‘தாஜ்மஹால் பேலஸ்’.

ஊரடங்கு காரணமாக இந்த ஓட்டல் வெறிச்சோடி காணப்படுகிறது.

அறைகள் எல்லாம் காலி.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரைப் பணயம் வைத்து இறங்கியுள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தங்குவதற்கு, இந்த ஒட்டலைத் திறந்து விட்டுள்ளது, அதன் நிர்வாகம்.

ஓட்டலுக்கு அருகேயுள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும்  நர்சுகள் , தாஜ்மஹாலில் தங்கிக் கொள்ளலாம்.

முதலாம் உலகப்போரின் போது, இந்த ஓட்டல் மருத்துவமனையாகக் கொஞ்ச நாட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்