‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு ஜீப் வழங்குகிறது மஹிந்திரா!

11mahindra

சென்னை:

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த தங்கமகன் மாரியப்பனுக்கு மஹிந்திரா நிறுவனம் கார் வழங்கி கவுரவிக்கிறது.

பிரேசிலில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி  தங்கப்பதக்கத்தை வென்று  வரலாற்று சாதனை செய்து இந்தியாவை பதக்கப்பட்டியலில் இணைத்து பெருமைப்பட செய்தார்.

இதையடுத்து, மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி, மத்திய அரசு ரூ. 75 லட்சம் மற்றும்  பல்வேறு தரப்பினர் பரிசுத்தொகையை அளித்து வருகின்றனர்.

நடந்து  முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, சாக்‌ஷி மாலிக் ஆகியோருக்கும் மஹீந்திரா நிறுவனம் ஜீப் வழங்கி கவுரவித்த்து.

அதுபோல  தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் ஜீப் ஒன்றை பரிசளித்து கவுரவிக்க முன் வந்துள்ளது. அத்துடன் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தன்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து மாரியப்பனுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி