‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது! ஜனாதிபதி வழங்கினார்

டில்லி,

மிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் இந்திய ஜனாதிபதி.

டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை படைக்கிறவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு, ‘பத்ம’ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  அறிவித்தது

மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 7 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 75 பேருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 89 பேர் விருதுப்பட்டியலில் இடம் பிடித்தனர்.

பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாசுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ்,  முன்னாள் மத்திய அமைச்சர்கள்  சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி, விண்வெளி விஞ்ஞானியும, யூ.ஆர்.ராவ். முன்னாள் முதல்-மந்திரி சுந்தர்லால் பட்வா,முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா, ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி யுடன் விஸ்வமோகன் பட் (ராஜஸ்தான்), தேவி பிரசாத் திவிவேதி (உத்தரபிரதேசம்), தேஹம்டன் உத்வாடியா (மராட்டியம்), ரத்ன சுந்தர் மகாராஜ் (குஜராத்), நிரஞ்சன் நந்தா சரஸ்வதி (பீகார்), தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிந்தோர்ன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

பத்திரிகையாளர் சோ மறைந்துவிட்டதால், அவருக்கு பதில் அவரது மனைவி விருதை பெற்றுக் கொண்டார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மாரியப்பன் தங்கவேலு  பத்மஸ்ரீ விருதை பெற்றார்.

மேலும்,மிருதங்க இசைக்கலைஞர் டி.கே. மூர்த்தி,வரலாற்று ஆசிரியர் மைக்கேல் டேனினோ, டாக்டர் சுனிதி சாலமன், பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சேகர் நாயக் (கர்நாடகம்), வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா (கர்நாடகம்), கடந்த ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனை தீபா மாலிக் (கர்நாடகம்), ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் (திரிபுரா), இந்திய ஆக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் (கேரளா), ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (அரியானா) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கதகளி நடனக்கலைஞர் செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர்,நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் (கர்நாடகம்), 92 வயதான கர்நாடக இசைக்கலைஞர் பரசால பி. பொன்னம்மாள், தேசிய விருது பெற்ற சினிமா பின்னணி பாடகி அனுராதா பாத்வால் (மராட்டியம்), களரிபயட்டு தற்காப்பு கலை வீராங்கனை மீனாட்சியம்மா (கேரளா) ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

இவர்களுக்கு ‘பத்ம’ விருது  விருதுகளை வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி.

Leave a Reply

Your email address will not be published.