Random image

ஐதராபாத் : நிஜாம் அருங்காட்சியகத்தில் தங்கப் பொருட்கள் திருட்டு

தராபாத்

தராபாத் நகரில் உள்ள நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது தெலுங்கானாவின் தலைநகரான ஐதராபாத் நிஜாம் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது.   அதன் பிற்கு சர்தார் வல்லப்பாய் படேலின் முயற்சியில் இந்திய ஆளுமையின் கீழ் வந்தது.   நிஜாம் வசித்த மாளிகையில் அவர் உபயோகித்த பொருட்கள் வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

பழைய ஐதராபாத்தில் உள்ள புரானா ஹவேலியில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க டிபன் பாக்ஸ், தங்க கப், சாசர், ஸ்பூன் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது.   இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வரும் நிஜாம் குடும்பத்தினரின் டிரஸ்ட் இது குறித்து புகார் அளித்துள்ளது.