கடந்த 21 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த அறிமுக இயக்குநருக்காக ’கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘96’ படத்தின் இயக்குநர் பிரேமுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது ‘96’ படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குநருமான மாருதி ராவின் மகனான கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ், கடந்த 1992 ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்ததை தொடர்ந்து அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிமுக இயக்குநரை தேர்வு செய்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதை தெலுங்கு சினிமா மட்டும் இன்றி, இந்திய சினிமாவே உணர்வுப்பூர்வமான விஷயமாக கருதுகின்றது.