எல்லா மததினருக்கும் புனிதமான நாள் என்றால் அது வெள்ளி கிழமைதான். புனிதமானது இந்த வெள்ளி கிழமையின் சிறப்பு என்ன என்பதை அறிவோமா?

கிறிஸ்துவர்களுக்கு வெள்ளிகிழமை புனித வெள்ளி. இந்துக்களுக்கும் வெள்ளி புனிதமானதுதான். கோவில்களில் கூட்டம் அலைமோதும்.

இஸ்லாமியர்களுக்கும் வெள்ளிகிழமை ஜும் ஆ நாள். அதாவது வெள்ளி கிழமை தொழுகை மிக முக்கியமானது.

அரபு நாடுகளில் வெள்ளிகிழமை தான் விடுமுறை நாள். அன்று மசூதிகளில் சிறப்பு தொழுகை நடை பெறும்.

சரி இந்துக்களுக்கு வெள்ளி எப்படி புனிதம் என்று பார்த்தால்  அதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் குறிப்பாக துர்க்கையம்மன் விரதம் மிக சிறப்பு மிக்கதாகும்.

மகாலெஷ்மியின் அம்சம் பொருந்தியது வெள்ளிகிழமை. இந்த கிழமையில் அம்மனுக்கு விரதம் இருந்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவி மந்திரத்தை கற்ற சுக்கிரச்சாரியார் அம்சம் பெற்றது இந்த வெள்ளிக்கிழமை.

சுப காரியங்கள்,திருமண காரியங்கள்,தெய்வ காரியங்கள் இந்த கிழமையில் செய்வது மிகவும் சிறப்பாகும். அதேபோல் வெள்ளிகிழமையில் பெண்குழந்த பிறப்பதும் குடும்பத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும்.

வெள்ளிகிழமை விரதம் இருந்து அவர்கள் அம்மன்வழி பாடு செய்தால் குடும்பம் தளைக்கும். தாலி நிலைக்கும்.

இப்போது புரிகிறதா… அனைத்து மத்ததினருக்குமே வெள்ளி, புனித நாள்!