வாஷிங்டன்:

மெரிக்கா-சீனா இடையே வர்த்த போர் நீடித்து வரும் நிலையில், அடுத்து நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா, சீனாவுக்கு இடையே கடந்த ஓராண்டாக வர்த்தப் போர் நடைபெற்று வருவதால், உலக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க சில நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே, இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சு வார்த்தகள் நடைபெற்றும் முடிவு காண முடியாமல் இழுபறி நீடித்து வருகிறத. இந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 10ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் என்று அதிபர் டிரம்பின்  வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க  சீன துணை பிரதமர் லியு ஹீ அமெரிக்கா செல்லவுள்ளார். அமெரிக்கா தரப்பில் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் ஆகியோர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,  சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பு நடவடிக்கை, எதிர்பார்த்த முடிவை தந்துள்ளதாக கூறியவர்,  சீனாவுடன் நடைபெறவுள்ள அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே  வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுமா இல்லையா என்று தனக்கு தெரியாது  என்று கூறியவர், இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார்.

அமெரிக்காவின் வர்த்தக கொள்கையால் சீன பொருளாதாரம் 24 டிரில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள டிரம்ப், இதன் காரணமாகவே, சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.