வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பனாஜி: வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந் நிலையில் கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் மட்டுமே போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் எவ்வித எதிர்ப்பும் எழவில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு விவசாயிக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதையே இலக்காக கொண்டு செயல்படுகிறது என்று கூறினார்.